வாடகைத் தாய் முறை வர்த்தகமயமாவதைத் தடுக்க இந்திய அரசு வரைவுச் சட்டம்

வியாழன், 25 ஆகஸ்ட் 2016 (09:40 IST)
இந்தியாவில், வாடகைத் தாய் முறை வர்த்தகமயமாவதைத் தடுக்கும் வகையில் புதிய சட்ட வரைவு ஒன்றை அரசு தயாரித்துள்ளது.


 

 
இந்தச் சட்டம், உரிய நடைமுறைகளுக்குப் பிறகு, நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெற்று சட்டமாக்கப்பட்டால் தற்போதுள்ள நடைமுறையில் பல மாற்றங்கள் ஏற்படும்.
 
வெளிநாட்டவர்கள், இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட வெளிநாட்டவர்கள், தனியாக இருக்கும் பெற்றோர், ஓரீனச் சேர்க்கையாளர்கள் உள்ளிட்டோர், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வது, இதன் மூலம் தடை செய்யப்படும்.
 
குழந்தைப்பேறு பெற முடியாத பெற்றோர், திருமணமாகி ஐந்தாண்டுகள் ஆகியும் குழந்தைப் பேறு இல்லாதவர்கள் ஆகியோர் மட்டுமே வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற முடியும். அதுவும், நெருங்கிய உறவினர் மூலமாகவே வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற முடியும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
 
ஆனால், குழந்தைப்பேறு இல்லாதவர்கள் அமைப்பு இந்த உத்தேச சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை, சட்டவிரோத வாடகைத்தாய் முறையை ஊக்குவிக்கும் என்று அவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்