நேதாஜியின் மரணம் விபத்து அல்ல கொலை; விலகும் மர்மங்கள்!!

சனி, 7 ஜனவரி 2017 (10:45 IST)
இந்திய தேசிய ராணுவத்தை ஏற்படுத்தி ஆங்கிலேயரர்களின் ஆட்சிக்கு எதிராக போராடிய இந்திய தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.


 
 
நேதாஜி, 1945–ம் ஆண்டு ஆகஸ்டு 18–ந் தேதி தைபேயில் நடந்த விமான விபத்தில் இறந்தார் என்று கூறப்பட்டு வருகிறது. ஆனால் உண்மையில் அவர் எப்படி இறந்தார் என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது.
 
இதுபற்றி ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஜி.டி. பக்ஷி, “போஸ்: தி இந்தியன் சாமுராய் – நேதாஜி அண்ட் தி ஐஎன்ஏ மிலிடரி அசஸ்மெண்ட்“ என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார்.
 
அதில் அவர் நேதாஜியின் மரணத்தில் உள்ள மர்மத்தை உடைத்துள்ளார். ஜப்பானுக்கான முந்தைய சோவியத் ரஷிய தூதர் ஜேக்கப் மாலிக் உதவியுடன் டோக்கியோவில் இருந்து நேதாஜி சைபீரிய பகுதிக்கு தப்பிச் சென்றார். அங்கு சென்று 3 வானொலி நிலையங்களையும் நிறுவினார். 
 
இது, இங்கிலாந்து ராணுவத்துக்கு தெரிய வந்தது. இதனால் நேதாஜியிடம் விசாரணை நடத்த தங்களை அனுமதிக்க வேண்டும் சோவியத் ரஷியாவிடம் கோரிக்கை வைத்தது. 
 
ஆனால், இந்த விசாரணையின் போது இங்கிலாந்து ராணுவத்தால் நேதாஜி சித்ரவதை செய்து கொல்லப்பட்டார். அவர் விமான விபத்தில் இறக்கவில்லை. இதற்கு மறுக்க முடியாத ஆதாரங்கள் என்னிடம் உள்ளன என அந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்