அப்போது இந்தியாவின் உறுப்பினராக அவர் போட்டியின்றி நூறு சதவீத வாக்குகளுடன் தேர்வு செய்யப்பட்டார். மீண்டும் ஒலிம்பிக் கமிட்டி தலைவராக தேர்வு செய்த பின் நீடா அம்பானி செய்தியாளர்களிடம் பேசிய போது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதில் எனக்கு பெருமை தான். இந்த கமிட்டியில் உள்ளவர்கள் அனைவரும் என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த மகிழ்ச்சியை, பெருமையான தருணத்தை நான் ஒவ்வொரு இந்தியருடன் பகிர்ந்து கொள்கிறேன். இந்தியாவிலும் உலகெங்கிலும் ஒலிம்பிக் இயக்கத்தை வலுப்படுத்துவதற்கு தேவையான முயற்சிகளை எடுக்கப் போகிறேன் என்று தெரிவித்தார்.