மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் மின்சாரம் இல்லாததால் மாணவி ஒருவர் சரியாக தேர்வு எழுத முடியாமல் போனதாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதை தொடர்ந்து, அந்த மாணவியின் வழக்கறிஞர் பல மையங்களில் இப்படி மின்தடை ஏற்பட்டதாகவும், சில இடங்களில் மெழுகுவர்த்தி ஒளியில் மாணவர்கள் தேர்வு எழுத சொல்லப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து நடத்திய விசாரணையில், நீதிமன்றம் நீட் முடிவுகளை இடைக்காலமாக வெளியிடக்கூடாது என்ற உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால், தேர்வுக்காக காத்திருக்கும் சுமார் 21 லட்சம் மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
இந்நிலையில், இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஜூன் 30ஆம் தேதி நடைபெற உள்ளதால், முடிவுகள் திட்டமிட்டபடி வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.