2025-26 கல்வியாண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் நாளை அதாவது மே 4, ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. மதியம் 2 மணி முதல் 5.20 மணி வரை நடைபெறும் இந்த தேர்வில், சுமார் 22 லட்சம் மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மரபுவழி மருத்துவம், கால்நடை மருத்துவம் மற்றும் ராணுவ பிஎஸ்சி நர்ஸிங் படிப்புகளுக்கான சேர்க்கை இந்த தேர்வின் மூலமாக நடைபெறுகிறது.
தமிழகத்தில் மட்டும் 1.5 லட்சம் பேர் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 31 மாவட்டங்களில் தேர்வு நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் 44 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.
தேர்வுக்குழு அனுமதிக்கும் ஹால் டிக்கெட் மற்றும் அடையாள அட்டை (அரசு அங்கீகாரம் பெற்றது) கட்டாயம் கொண்டு வர வேண்டும்.
மாணவர்கள் காலை 11.30 மணிக்கு தேர்விடத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
மதியம் 1.30 மணிக்கு முன்பே தேர்வறைக்குள் செல்ல வேண்டும். அதன் பிறகு அனுமதி கிடையாது.
முடிவில், ஹால்டிக்கெட்டில் உள்ள தகவல்களை சரியாகப் பூர்த்தி செய்து, கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும்.
கட்டுப்பாடுகள்
கைப்பேசி, கடிகாரம், மின்னணு சாதனங்கள் அனுமதிக்கப்படாது.
முழு கை சட்டை, பெல்ட், தோடு, மூக்குத்தி, ஜடை போன்றவை தவிர்க்கப்பட வேண்டும்.
தண்ணீர் பாட்டில்கள் வெளிப்படையானவை மட்டுமே அனுமதிக்கப்படும்.
தவறான பதிலுக்கு நெகட்டிவ் மதிப்பெண் உள்ளதால், மிகுந்த கவனத்துடன் பதிலளிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு nta.ac.in என்ற தேசிய தேர்வுகள் முகமை இணையதளத்தில் பார்க்கலாம்