3 பாகிஸ்தான் ராணுவ சாவடிகளை கைப்பற்றிய ஆப்கன்.. 12 பாகிஸ்தான் வீரர்கள் சுட்டுக்கொலை..!

Siva

ஞாயிறு, 12 அக்டோபர் 2025 (12:07 IST)
ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தததில், தலிபான் படைகள் பல பாகிஸ்தான் ராணுவ சாவடிகளை கைப்பற்றியதாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, குனார் மற்றும் ஹெல்மண்ட் மாகாணங்களில் மோதல் தீவிரம் அடைந்தது.
 
பாகிஸ்தானின் வான்வெளி மீறலுக்கு பதிலடியாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஆப்கான் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் இனாயத்துல்லா கோவாரஸ்மி தெரிவித்தார். 
 
பாகிஸ்தான் தரப்பு, ஆப்கானிஸ்தானில் இருந்து "முன்னறிவிப்பு இல்லாத" துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும், அதற்குத் தகுந்த பதிலடி கொடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
 
இந்தச் சண்டையில் குறைந்தது 12 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், ராணுவத்தின் சாவடிகள் மற்றும் தளவாடங்கள் அழிக்கப்பட்டதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்