நக்சலைட்டுகள் 8-பேர் சுட்டுக் கொலை.! பாதுகாப்பு படை வீரர் ஒருவர் மரணம்..!

Senthil Velan

சனி, 15 ஜூன் 2024 (14:13 IST)
சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 8-பேர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், பாதுகாப்பு படை வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார்.
 
சத்தீஸ்கர் மாநிலம் அபுஜ்மர் பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் உள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 
 
அப்போது, பாதுகாப்பு படையினருக்கும், நக்சல்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் நக்சலைட்டுகள் 8 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஒரு பாதுகாப்புப் படை வீரர் வீர மரணம் அடைந்தார். இந்தச் சம்பவத்தில் மேலும் இரண்டு பாதுகாப்புப் படை வீரர்கள் காயமடைந்துள்ளனர். 

ALSO READ: சாகித்ய அகாடமி விருதுகள்..! 'விஷ்ணு வந்தார்' புத்தகத்தை எழுதிய லோகேஷ் ரகுராமனுக்கு விருது..!!

மேலும் துப்பாக்கிச் சண்டை தொடர்ந்து அங்கு நடைபெற்று வருவதால் பதற்றமான சூழல் நிலவுவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்