இதேபோல் மும்பையில் மிகப்பெரிய அளவில் தற்போது டிராபிக் பிரச்சனை இருப்பதை எடுத்து அங்கு திரையுலக பிரபலங்கள் உட்பட பலரும் மெட்ரோ ரயிலை பயன்படுத்தி வருகின்றனர். படப்பிடிப்பு தளத்திலிருந்து மெட்ரோ ரயில் பயணம் செய்து அங்கிருந்து ஆட்டோவில் தனது வீட்டிற்கு செல்வதாக பிரபல நடிகை ஹேமாலினி தெரிவித்துள்ளார். சமீபத்தில் சாரா அலிகான் மும்பையில் டிராபிக்கில் சிக்கிக் கொண்டதை அடுத்து காரில் இருந்து இறங்கி மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது