பங்குச்சந்தை வரலாற்றில் முதல் முறையாக 50 ஆயிரத்தை தாண்டிய சென்செக்ஸ்!

வியாழன், 21 ஜனவரி 2021 (10:46 IST)
மும்பை பங்குச் சந்தை வரலாற்றில் முதல்முறையாக சென்செக்ஸ் 50000 புள்ளிகளை தாண்டி உள்ளதால் முதலீட்டாளர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர் 
 
கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பின்னர் கடந்த சில வாரங்களாக பங்குச் சந்தை ஏற்றம் கண்டு வருகிறது என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இன்று முதல் முறையாக சென்செக்ஸ் 50000 புள்ளிகளை தாண்டி 50,065 என்ற நிலையில் தற்போது விற்பனையாகி வருகிறது 
 
உற்பத்தியான பொருள்களின் விற்பனை முந்தைய ஆண்டுகளை விட இந்த ஆண்டு உயர்ந்திருப்பது, பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையை நோக்கி சென்று கொண்டிருப்பது ஆகியவை மும்பை பங்குச்சந்தை உயர்வுக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது 
 
இன்று காலை மும்பை பங்குச் சந்தை தொடங்கியவுடன் 305 புள்ளிகள் உயர்ந்து 50,065 என்ற நிலையில் தற்போது விற்பனையாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 90 புள்ளிகள் வரை உயர்ந்து 14733 என விற்பனையாகி வருகிறது 
 
மோட்டார் வாகன உற்பத்தி, வங்கிகள், பார்மசூட்டிக்கல் உள்பட அனைத்து நிறுவனங்களின் பங்குகளும் விலை உயர்ந்து உள்ளன என்பதும் இதனால் முதலீட்டாளர்கள் அனைவரும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இரண்டு வருடங்களுக்கு மேல் முதலீடு செய்தவர்களுக்கு கிட்டத்தட்ட 25% லாபம் கிடைத்துள்ளதாக பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்