வெள்ளக்காடாய் மாறிய மும்பை: ஒரே நாளில் 33 பேர் மரணம்!

திங்கள், 19 ஜூலை 2021 (08:15 IST)
மூன்றே மணி நேரத்தில் 25 சென்டி மீட்டர் அளவுக்கு பெய்த மழையால் மும்பை நகரமே வெள்ளத்தில் மிதக்கிறது. 

 
மும்பையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதையடுத்து மும்பையில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மூன்றே மணி நேரத்தில் 25 சென்டி மீட்டர் அளவுக்கு பெய்த மழையால் மும்பை நகரமே வெள்ளத்தில் மிதக்கிறது. 
 
மும்பை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இரவு விடிய விடிய கொட்டித் தீர்த்த மழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் பலர் வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடத்திற்கு மாறி உள்ளனர். 
 
இதில், செம்பூர் என்ற பகுதியில் திடீரென குடியிருப்பு பகுதிகளில் சுவர் இடிந்ததை அடுத்து 15 பேர் பலியாகியுள்ளதாகவும் 16 பேர் படுகாயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. 
 
இது போன்று நகரில் ஏற்பட்ட பல்வேறு சம்பவங்களால் மும்பையில் ஒரே நாளில் 33 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், நீரேற்று நிலையங்கள் மூழ்கி மோட்டார்கள் பழுதடைந்ததால் நகரின் பல பகுதிகளில் குடிநீர் வினியோகமும் பாதிக்கப்பட்டது. மின்விநியோகமும் தடைப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்