இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தினரால் அறிமுகம் செய்யப்பட்ட கல்லினன் என்ற காரின் அடிப்படை விலை ரூ.6 கோடியே 95 லட்சம் ரூபாய். எஸ்.யூ.வி தோற்றம் கொண்ட இக்காரை தேவையான வசதிக்கு ஏற்ப மாற்றியமைத்ததால் இதன் விலை ரூ.13 கோடி ஆகும். மேலும், இக்காரின் இறக்குமதி வரியாக ரூ.20 லட்சமும், சாலைப்பாதுகாப்பு வரியாக ரூ.40 ஆயிரமும் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது. மேலும், இக்காரிற்கு 0001 என்ற பதிவெண்ணைப் பெற ரூ.12 லட்சம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.