வாவ்! வாட் எ டான்ஸ் ; விழாவில் பேராசிரியர் ஆடிய நடனம் - வைரல் வீடியோ

சனி, 2 ஜூன் 2018 (11:41 IST)
மகாராஷ்டிராவில் திருமண விழாக்களில் பேராசிரியர் ஒருவர் நடனம் ஆடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 
மத்திய பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்தவர் சஞ்சீவ் ஸ்ரீவாஸ்தவா. இவர் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். நடனத்தில் ஆர்வம் உடைய அவர் செல்லும் விழாக்களிலெல்லாம் கலக்கலாக நடனம் ஆடி வருகிறார்.
 
இதில், சமீபத்தில் உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற அவர், பாலிவுட் நடிகர் கோவிந்தா நடனம் ஆடிய ஒரு பாடலுக்கு அவரைப் போலவே நடனம் ஆடி அசத்தினார். கோவிந்தாவின் தீவிர ரசிகரான சஞ்சீவ், தனது நடனத்திலும் அவரை பின்பற்றி வருகிறாராம். இவர் நடனத்தை கண்டு வியக்கும் உறவினர்கள் ரூபாய் நோட்டுகளை அவர் மீது வீசு தங்கள் மகிழ்ச்சியை தெரிவிக்கின்றனராம். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பலரும் அவரது நடனத்தை பாராட்டி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்