சமூக வலைத்தளங்களில் ஒன்றான எக்ஸ் தளத்தில், ஆகஸ்ட் 2025-ல் அதிகம் பேசப்பட்ட இந்திய பிரபலங்கள் குறித்த ஒரு பட்டியல் வெளியாகி உள்ளது. அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் என பல துறைகளில் இருந்து 10 பிரபலங்கள் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.
இந்த பட்டியலில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தை பிடித்துள்ளார். அவர் தனது அரசியல் மற்றும் அரசின் திட்டங்கள் தொடர்பான பதிவுகள் மூலம் எக்ஸ் தளத்தில் தொடர்ந்து விவாதங்களை ஏற்படுத்தி வருகிறார்.
இரண்டாவது இடத்தில் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். உள்ளார். அவர் நடித்த வார் 2 திரைப்படம் மற்றும், அவரது பிறந்தநாள் கொண்டாட்டங்களும் இந்த பட்டியலில் அவருக்கு முக்கிய இடத்தை பெற்றுத் தந்துள்ளன.
நடிகர் விஜய் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். 'தமிழக வெற்றிக் கழகம்' தொடங்கிய பிறகு அவரது அரசியல் நகர்வுகள், மற்றும் 'கோட்' திரைப்படம் தொடர்பான அப்டேட்டுகள் எக்ஸ் தளத்தில் பேசுபொருளாகி வருகின்றன.
தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் நான்காவது இடத்திலும், இந்திய கிரிக்கெட் வீரர் ஷுப்மன் கில் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.
அரசியல் தலைவர் ராகுல் காந்தி ஆறாவது இடத்தில் உள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர்களான விராட் கோலி மற்றும் எம்.எஸ். தோனி ஆகியோர் முறையே ஏழாவது மற்றும் ஒன்பதாவது இடங்களில் உள்ளனர்.
தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் பத்தாவது இடத்தில் உள்ளார்.
இந்த பட்டியல், அரசியல், சினிமா, விளையாட்டு ஆகிய துறைகளை சேர்ந்த பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் எந்த அளவுக்குப் பேசுபொருளாக உள்ளனர் என்பதைத் தெளிவாக காட்டுகிறது.