அமித்ஷாவின் மிரட்டால் பாஜகவுக்கு அதிக தொகுதிகள் - கே.பாலகிருஷ்ணன்
ஞாயிறு, 7 மார்ச் 2021 (12:14 IST)
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மிராட்டலால் பாஜகவுக்கு அதிமுக அதிக தொகுதிகளை ஒதுக்கியுள்ளது என மார்க்ஸ்ஸிட்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம்தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மே 2 ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என நேற்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதனால் தமிழக அரசியல்களம் சூடுபிடித்துள்ளது.திராவிட கட்சிகள் மற்ற கட்சிகளுடன் கூட்டணி குறித்தும் தொகுதிப் பங்கீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தேர்தல் கால நடைமுறைகள் சமீபத்தில் அமலுக்கு வந்த நிலையில், தமிழக தேர்தல் களம்
பரபரப்புடன் காட்சியளிக்கிறது. அனைத்து கட்சியினரும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் தற்போது அதிமுக தலைமையிலான கூட்டணியில் வரும் சட்டமன்றத்தேர்தலில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதற்காக ஒப்பந்தம் கையெழுத்தானது.
மேலும், அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியிலும் பாஜக போட்டியிடவுள்ளது. சமீபத்தில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சித் தலைவர்களிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.#BJP
இதுகுறித்து மார்க்ஸ்ஸிட்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இது குறித்து விமர்சித்துள்ளார்.
அதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மிராட்டலால் பாஜகவுக்கு அதிமுக அதிக தொகுதிகளை ஒதுக்கியுள்ளது.
அதிமுக கூட்டணிக்கு இதனால் எந்தப் பயனும் தராது. இந்தக் கூட்டணியில் எப்போது யார் பிரிந்து செல்வார்கள் எனத் தெரியாது என்று தெரிவித்துள்ளார்.