ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தை காலி செய்ய மேலும் காலக்கெடு..! உச்சநீதிமன்றம் உத்தரவு..!!

Senthil Velan

திங்கள், 10 ஜூன் 2024 (14:57 IST)
டெல்லி ரோஸ் அவென்யூவில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் அலுவலகத்தை காலி செய்ய ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை காலக்கெடுவை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
டெல்லியின் ரோஸ் அவென்யூவில் உள்ள நீதிமன்றத்தின் உள்கட்டமைப்பு பணிகளுக்காக ரோஸ் அலுவலகத்தில் அமைந்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் தேசிய தலைமை அலுவலகத்தை ஜூன் 15ஆம் தேதிக்குள் காலி செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
 
ஆனால் காலக்கெடுவை நீட்டிக்குமாறு ஆம் ஆத்மி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரன் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. ஆம் ஆத்மி அலுவலகத்தை காலி செய்வதற்கான காலக்கெடுவை நீடிக்க வேண்டும் என்று அப்போது முறையிடப்பட்டது.

ALSO READ: ஜெகன் மோகன் மீண்டும் வெற்றி பெறுவார்..! ரூ.30 கோடி பந்தயம் கட்டிய நிர்வாகி மர்மமரணம்..!
 
இதைத்தொடர்ந்து டெல்லி ரோஸ் அலுவலகத்தில் அமைந்துள்ள ஆம் ஆத்மி அலுவலகத்தை காலி செய்ய ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை காலக்கெடுவை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்