அரபிக் கடலில் மேலும் பல புயல்கள் உருவாகும்: ஏன் தெரியுமா?

புதன், 19 மே 2021 (10:29 IST)
பூமி வெப்பமயமாதல் பிரச்சனை காரணமாக கடல் மட்டம் உயர்ந்து வருவதால் அரபிக் கடலில் மேலும் பல புயல்கள் உருவாக வாய்ப்பிருப்பதாக வானிலை நியுணர்கள் எச்சரித்துள்ளனர். 

 
சமீபத்தில் அரபிக்கடலில் உருவான டவ்-தேவ் புயல் கேரளா குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் புரட்டிப்போட்டது என்பதும் குறிப்பாக குஜராத்தில் உள்ள ஆயிரக்கணக்கான கிராமங்கள் பெரும் சேதம் அடைந்தன என்றும் தகவல்கள் வெளிவந்தன. 
 
இந்நிலையில், பூமி வெப்பமயமாதல் பிரச்சனை காரணமாக கடல் மட்டம் உயர்ந்து வருவதால் அரபிக் கடலில் மேலும் பல புயல்கள் உருவாக வாய்ப்பிருப்பதாக வானிலை நியுணர்கள் எச்சரித்துள்ளனர். வங்கக்கடலை விட வெப்பம் குறைவாக உள்ள அரபிக்கடலிலும் இப்போது வெப்ப நிலை அதிகரித்து வருவதால் புயல் அதிக அளவில் உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த நிலை மாறுவதற்கான சாத்தியங்களும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்