ஓடிடி தளங்கள் நாட்டின் அமைதியை குலைக்க பார்க்கின்றன – மோகன் பகவத் குற்றச்சாட்டு!

வெள்ளி, 15 அக்டோபர் 2021 (11:10 IST)
ஓடிடி தளங்கள் இந்திய இளைஞர்களிடையே கெடுதல்களை விதைப்பதாக ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன்பகவத் குற்றம் சாட்டியுள்ளார்.

சமீப காலமாக ஓடிடி தளங்களில் வெளியாகும் இந்தியா சார்ந்த இணைய தொடர்கள் இந்து மதத்தை திட்டமிட்டு கீழ்மைபடுத்துவதாக தொடர்ந்து பலர் குற்றம் சாட்டி வருகின்றனர். முக்கியமாக இந்தியில் வெளியான சாக்ரட் கேம்ஸ், ஆஷ்ரம், தாண்டவ் உள்ளிட்ட வெப் சிரிஸ்களுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தில் பேசிய அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் “இந்தியாவின் அமைதியை குலைக்கவும், சாதி மத பிரிவினையை ஏற்படுத்தவும் பல்வேறு சதிகள் நடக்கின்றன. அவற்றை முறியடித்து நாட்டில் அமைதியை நிலைநாட்ட வேண்டும். இந்தியாவில் ஓடிடி தளங்கள் கட்டுப்பாடின்றி செயல்படுவது வருத்தமளிக்கிறது” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்