5 மாநில தேர்தலில் தோற்றாலும் முதலிடத்தில் மோடி ! எதில் தெரியுமா...?

திங்கள், 17 டிசம்பர் 2018 (17:42 IST)
பேஸ்புக் அளவுக்கு மக்களை ஆட்டிப்படைக்கும் ஒரு சமுக வலைதளம் தான் இன்ஸ்டாகிராம். இதில் உள்ள முக்கியமான சிறப்பம்சம் புகைப்படங்களை பதிவிடுவதாகும். ஹாலிவுட் , கோலிவுட்,பாலிவுட் நட்சத்திரங்கள், உலக அரசியல் பிரபலங்கள் போன்ற எல்லாத்துறையில் உள்ளவர்களும் ஆர்வத்துடன் இதில் தம் புகைப்படங்களையும்  நிகழ்ச்சிகளையும் பதிவிட்டு வருகின்றனர்.
மக்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த சமுக வலைதளம் முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக இருந்தாலும்கூட சாதாரண மக்களையும் பிரபலங்களுடன் பேச வைத்து தன் கருத்துக்களைப் பறிமாற உதவும் விதத்தில் இந்த சமூக வலைதளம் உள்ளதே பொதுமக்கள் இதனை அதிகம் விரும்புவதற்கு காரணம்.
 
இந்த ஆண்டு  இன்ஸ்டாகிராமில் உலக அளவில் அதிகம் பேர் பின் தொடர்பவர்களைப் பற்றிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.இதில் உலக அளவில் அதிகம் பின் தொடரும் தலைவராக பிரதமர் கோடி இருக்கிறார். இவரை  14.8 மில்லியன் மக்கள் பின் தொடர்வதாகவும், அடுத்ததாக இந்தோனேஷியாவின் அதிபர் ஜோகோ விகோடோவை 14.3 மில்லியன் மக்களும் பின் தொடர்வதாகவும் , மூன்றாவதாக அமெரிக்க அதிபர் டிரம்பை  11 மில்லியன் மக்கள் பின் தொடர்வதாகவும் இந்தப் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்