டெல்லியில், ஜந்தர் மந்தர் பகுதியில் போராடி வரும் தமிழக விவசாயிகள் தங்களது வங்கிக் கடனை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன், ரிசர்வ் வங்கியை முற்றுகையிட பேரணியாகச் சென்றனர்.
பின்னர், அய்யாக்கண்ணு தவிர மற்றவர்களை ஜந்தர் மந்தர் பகுதியிலேயே இறக்கிவிட்டனர். ஆனால், விவசாயிகள் ஜந்தர் மந்தர் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டதால், அய்யாக்கண்ணையும் காவல்துறை விடுதலை செய்தது.