மோடியின் பிடியில் மாயமான காங்கிரஸ் எம்.எல்.ஏ: டி.கே. சுரேஷ் எம்பி குற்றச்சாட்டு

வியாழன், 17 மே 2018 (11:30 IST)
சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலில் 104 எம்.எல்.எக்கள் மட்டுமே உள்ள பாஜகவை ஆளுனர் ஆட்சி அமைக்க அழைத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மெஜாரிட்டிக்கு தேவையான 112 எம்.எல்.ஏக்கள் என்ற எண்ணிக்கை எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் ஆதரவு தந்தால் மட்டுமே சாத்தியம் என்பதால் குதிரை பேரம் நிச்சயம் நடக்கும் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
 
இந்த நிலையில் திடீரென காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சிலர் காணாமல் போய்விட்டதாகவும், அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று கூறப்பட்டது. ஆனால் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஆனந்த் சிங் என்பவர் மட்டுமே தற்போதைக்கு தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருப்பதாகவும், அவரும் மோடியின் பிடியில் இருப்பதால்தான் வெளியேற வரமுடியாமல் இருப்பதாகவும் காங்கிரஸ்  எம்.பி. டி.கே. சுரேஷ் பெங்களூரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
 
இந்த நிலையில் காங்கிரஸ் மற்றும் மஜத எம்.எல்.ஏக்கள் குதிரை பேரத்திற்கு சென்றுவிடாத வகையில் மைசூர் சாலையில் உள்ள ஈகிள்டன் ரிசார்ட்டில் தங்க வைத்திருப்பதாக கூறப்படுகிறது ஆனால் இந்த ரிசார்ட் காஸ்ட்லி என்பதால் இதில் 15 நாட்கள் தங்க வைத்தால் பில் எகிறிவிடும் என்பதும் காங்கிரஸ் கட்சியின் கவலையாக உள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்