படேல் மட்டும் பிரதமராக இருந்திருந்தால் வல்லரசாகிருப்போம்.. மத்திய அமைச்சர் கருத்து

Arun Prasath

சனி, 2 நவம்பர் 2019 (14:33 IST)
வல்லபாய் படேல் இந்தியாவின் முதல் பிரதமராக இருந்திருந்தால் இந்தியா வல்லரசாக ஆகிருக்கும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.

இந்தியாவின் இரும்பு மனிதர் என அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலின் 144 ஆவது பிறந்தநாளை ஒட்டி, ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் “ஒற்றுமை தின ஓட்டம்” நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்துகொண்டார்.

அப்போது நிரூபர்களுக்கு பேட்டியளித்த அவர், ”படேல் இந்தியாவின் முதல் பிரதமராக இருந்திருந்தால் இந்தியா எப்போதோ வல்லரசாக இந்தியா ஆகிருக்கும். பிரதமர் மோடி காந்த 2014 ஆம் ஆண்டில் படேல் பிறந்ததினத்தை ஒற்றுமை தினமாக அறிவித்தார். அன்றிலிருந்து ஆண்டுதோரும் படேலின் பிறந்தநாள் ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது” என கூறியுள்ளார்.

மேலும் “படேல் 560 மாநிலங்களை இந்தியாவாக இணைத்தவர்” என கூறி புகழ்ந்தார். முன்னதாக ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், சக்திவாய்ந்த இந்தியாவிற்கான படேலின் பங்களிப்பை குறித்து பேசியுள்ள நிலையில், தற்போது தர்மேந்திர பிரதான் சர்தார் வல்லபாய் படேல் இந்தியாவின் முதல் பிரதமராக இருந்திருந்தால் இந்தியா வல்லரசாகிருக்கும் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்