ஹரியானா மாநிலம், சிர்சாவில் கலானாவாலி என்ற பகுதியில் வசித்து வருபவர் ஜனகராஜ். ஒரு நாள் இவரது மனைவியின் நகைகளை ஒரு பெரிய கிண்ணத்தில் வைக்கப்பட்டுள்ளது. அப்போது அவரது மனைவி காய்கறியை நறுக்கும்போது வந்த கழிவுகளை தவறுதலாக அந்த கிண்ணத்தில் சேமித்துள்ளார். பின்பு அந்த கழிவுகளை குப்பையில் கொட்டும்போது அந்த நகையையும் சேர்த்து கொட்டியுள்ளார்கள்.
அதன் பின்பு வீட்டில் நகை எங்கே என தேடியபோது தான் அவர்களுக்கு கழிவுகளோடு சேர்த்து நகையையும் கொட்டிய நியாபகம் வந்துள்ளது. பின்பு குப்பையில் தேடிய போது அந்த நகையை காணவில்லை. எனவே அந்த வீட்டிற்கு வெளியே உள்ள சிசிடிவி கேமராவை ஆராய்ந்தபோது, ஒரு காளை மாடு அந்த நகையை முழுங்கியுள்ளது தெரியவந்தது.