சமீபத்தில் பாகிஸ்தான் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் ’சீனாவே தங்கள் நாட்டின் நம்பிக்கைக்கு உரிய கூட்டாளி என்று சீனாவை கட்டுப்படுத்த அமெரிக்கா, இந்தியாவை பயன்படுத்துவதாகவும் கூறினார். மேலும் அமெரிக்காவின் கையாளாக இந்தியா இருக்கிறது எனவும் அவர் குற்றம் சாட்டினார்
பாகிஸ்தான் பிரதமரின் இந்த பேட்டிக்கு பதிலடி கொடுத்த மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் இம்ரான்கான் கூறியபோது, இம்ரான்கானின் கருத்து அவரது நாட்டுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் இந்தியாவுக்கு தனிப்பட்ட நாகரீகம் உள்ளதாவும் கூறினார். ஆங்கிலேயரின் ஆட்சிக்கு பிறகு கிடைத்த சுதந்திரத்தை பெரும் பொக்கிசமாக இந்தியா கருதுவதாகவும் இந்திய-அமெரிக்க உறவை சீர்குலைக்க பாகிஸ்தான் பிரதமர் எடுக்கும் முயற்சி எதுவும் பலிக்காது என்றும் பதிலடி கொடுத்துள்ளார். அமைச்சர் ஜெய்சங்கரின் இந்த பதிலடி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது