குடியரசுத் தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சி வேட்பாளராக மீரா குமார் அறிவிப்பு

வியாழன், 22 ஜூன் 2017 (17:45 IST)
குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு எதிராக முன்னாள் மக்களவை சாபாநாயகர் மீராக குமார் எதிர்க்கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.


 

 
பிரணாப் முகர்ஜி பதவிக்காலம் முடியவடைய உள்ள நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தல் அடுத்த மாதம் நடைப்பெற உள்ளது. பாஜக முன்னாள் பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்தை தனது கட்சி வேட்பாளராக அறிவித்தது. 
 
இதையடுத்து இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைப்பெற்ற ஆலோசனை கூட்டத்தில் இடதுசாரி கட்சிகள், திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் பங்கேற்றனர். இந்நிலையில் எதிர்கட்சி சார்பாக முன்னாள் மக்களவை சபாநாயகர் மீரா குமாரை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவித்துள்ளனர்.

 

வெப்துனியாவைப் படிக்கவும்