அப்துல்கலாமின் இறுதி நேரத்தில் காப்பாற்ற தவறிய ஆளுநர்: வெளியான அதிர்ச்சி தகவல்!

வெள்ளி, 27 ஜனவரி 2017 (13:57 IST)
மேகாலயா ஆளுநர் தமிழகத்தை சேர்ந்த சண்முகநாதன் பாலியல் புகாரால் தனது பதவியை ராஜினாமா செய்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவர் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் மறைந்த போது அவரது இறுதி நிமிடங்களில் மிகவும் அலட்சியமாக நடந்து கொண்டார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.


 
 
மக்களின் குடியரசு தலைவர் என போற்றப்படும் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் மரணமடைந்தார். அவரது இறுதி நிமிடங்களில் தானும் உடனிருந்ததாக கூறி வருகிறார் சண்முகநாதன். ஆனால் அது சுத்த பொய் என பிரதமர் அலுவலகத்துக்கு ராஜ்பவன் ஊழியர்கள் அனுப்பி வைத்த 5 பக்க கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
 
அதில், அப்துல்கலாமுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு ஷில்லாங்கில் பெதானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அப்துல்கலாமை சென்று பார்க்குமாறு ஆளுநர் சண்முகநாதனிடம் கூறினோம். ஆனால் அவர் அப்துல்கலாமை பார்க்க செல்லாமல் படுக்கை அறைக்குப் போய்விட்டார்.


 
 
தூங்கிக் கொண்டிருந்த சண்முகநாதனிடம் பிரதமர் போன் செய்து கூறிய பின்னரே அவர் மருத்துவமணைக்கு ஓடினார் என கூறப்பட்டுள்ளது. மக்களின் குடியரசு தலைவராக இருந்த தமிழகத்தை சேர்ந்த அப்துல்கலாமை காப்பாற்ற ஆளுநராக இருந்த தமிழகத்தைச் சேர்ந்த சண்முகநாதன் தவறியதும், அலட்சியமாக நடந்து கொண்டதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்