அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி; அத்தியாவசிய மருந்துகளும் விலை உயர்வு!
வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (09:47 IST)
இந்தியாவில் பல்வேறு பொருட்களும் விலை உயர்ந்து வருவதை தொடர்ந்து மருந்துகளின் விலையும் உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கடந்த சில வாரங்களில் பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்ந்துள்ள நிலையில், இன்று முதல் சுங்க கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன. சமீப காலமாக பல்வேறு காரணிகளின் விலை உயர்வது காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் எழுந்துள்ளது.
இந்நிலையில் தற்போது அத்தியாவசிய மருந்துகளின் விலை 10.7% வரை உயர்வதாக தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி இந்தியாவில் அத்தியாவசிய மருந்துகளாக பட்டியலிடப்பட்ட பாராசிட்டமல் மாத்திரை உட்பட 800 மருந்துகளின் விலை 10.7 சதவீதம் வரை விலை உயர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.