இதன் அறிமுக விழா நேற்று நடந்தது. இந்த எந்திரம் மூலம் ரத்தத்திலுள்ள குளூக்கோஸ் அளவு, டெங்கு, ஹீமோகுளோபின், டைபாய்டு, ஹெச்ஐவி, மலேரியா, சிக்குன்குனியா, சிறுநீர் பரிசோதனைகள், ஈசிஜி, காது பரிசோதனை, தோல் பரிசோதனை உள்ளிட்டவைகளை நாமே கணினியின் உதவியுடன் செய்து கொள்ளலாம். தற்போது இந்த ஏஹெச்எம் இயந்திரம் இந்தூர், புவனேஷ்வர், குர்ஹான் ஆகிய நகரங்களில் தற்போது செயல்பட்டு வருகின்றன. விரைவில் இந்தியாவில் உள்ள அனைத்து நகரங்களுக்கும் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிகிறது.