இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, சமீபத்தில், சந்திரயான் 3 விண்கலத்தை வெற்றிகரமான சந்திரனில் தரையிறக்கியது.
இதையடுத்து, இஸ்ரோ சூரியனை ஆய்வு செய்வதற்கான ஆதித்யா திட்டத்தில் இறங்கியுள்ள நிலையில், இந்த திட்டத்தின் முதல் விண்கலமான ஆதித்யா எல்-1 கடந்த செப்டம்பர் 2ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது.
இந்த நிலையில் சந்திரயான்3, ஆதித்யா எல்1 ஆகிய திட்டங்களைத் தொடர்ந்து, கடல் வளங்களை ஆய்வு செய்வதற்காக, இந்தியா மத்ஸ்யா6000 என்ற நீர்மூழ்கி ஆய்வு வாகனத்தை சுமார் 6 கிலோ மீட்டர் ஆழத்திற்கு அனுப்பும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இந்த வாகனத்தில் 3 ஆய்வாளர்கள் அனுப்பப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.