சமீபத்தில் ஜிஎஸ்டி வரிவிகிதம் மாற்றியமைக்கப்பட்ட நிலையில் ஜிஎஸ்டி விலை குறைக்கப்பட்ட புதிய விலைப்பட்டியலை வெளியிட்டுள்ளது மாருதி சுசுகி நிறுவனம்.
முன்னதாக இந்தியா முழுவதும் பல்வேறு பொருட்களுக்கு 5 சதவீதம் தொடங்கி 12, 18, 28 என நான்கு கட்டங்களில் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு வந்த நிலையில், சமீபத்தில் ஜிஎஸ்டி திருத்தம் மூலமாக இரண்டு கட்டமாக மாற்றப்பட்டு பல பொருட்களுக்கும் ஜிஎஸ்டி வரிகள் குறைக்கப்பட்டுள்ளது. அவ்வாறாக கார், பைக் உள்ளிட்ட போக்குவரத்து சாதனங்கள் மீதான ஜிஎஸ்டியும் குறைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பல வாகனங்களும் விலைக் குறையத் தொடங்கியுள்ளன. செப்டம்பர் 22 முதல் புதிய ஜிஎஸ்டி சலுகைகள் அமலுக்கு வரும் நிலையில் தனது விலை குறைக்கப்பட்ட பட்டியலை மாருதி சுசுகி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கார் மாடல்களும் குறைக்கப்பட்ட விலையும்..
மாருதி ஸ்விஃப்ட் - ரூ.84,600 விலை குறைப்பு
மாருதி டிசையர் - ரூ.87,700 விலை குறைப்பு
செலிரியோ - ரூ.94,000 விலை குறைப்பு
ஆல்டோ கே 10 - ரூ.1.07 லட்சம் விலை குறைப்பு
எஸ் பிரஸோ - ரூ.1.29 லட்சம் விலை குறைப்பு
Edit by Prasanth.K