தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் காரணமாக செமஸ்டர் தேர்வுகள் முன்கூட்டியே நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இதற்கு உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் இன்று விளக்கம் அளித்துள்ளார்.
தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "செமஸ்டர் தேர்வுகள் உட்பட அனைத்து தேர்வுகளும் பல்கலைக்கழகங்களால் கல்லூரிகள் தொடங்குவதற்கு முன்பே வரையறுக்கப்படுகின்றன. இதனை தேர்தல் ஆணையம் நன்கு அறியும். எனவே, தேர்தல் ஆணையம் விடுமுறை காலங்களில்தான் தேர்தல் பணிகளை மேற்கொள்ளும்" என்று தெரிவித்தார்.