மறைந்த ராணுவ வீரரின் மனைவிக்கு 27 வருடங்களுக்கு பின் கிடைத்த உதவி!

வெள்ளி, 16 ஆகஸ்ட் 2019 (22:24 IST)
இந்திய ராணுவத்தில் பணியாற்றி கடந்த 1992ஆம் ஆண்டில் திரிபுரா எல்லையில் வீரமரணமடைந்த இந்திய ராணுவ வீரர் ஒருவரின் மனைவிக்கு 27 ஆண்டுகள் கழித்து நிதி உதவி கிடைத்து உள்ளது 
 
இந்திய ராணுவ வீரர் மோகன் சிங் என்பவரின் மனைவி 18 வயதாக இருக்கும்போது அவருடைய கணவர் இராணுவத்தில் மரணமடைந்தார். திருமணமான இரண்டே வருடத்தில் கணவர் மரணம் அடைந்ததால் அதிர்ச்சி அடைந்த அவருக்கு ஒரு கைக்குழந்தை இருந்தது மட்டுமின்றி கர்ப்பமாகவும் இருந்தார்.
 
அதன் பின் அரசு அளித்த சிறிய தொகை மற்றும் பென்ஷன் பணத்தில்தான் அவர் தனது இரண்டு குழந்தைகளையும் இத்தனை நாட்கள் கஷ்டப்பட்டு காப்பாற்றி வருகின்றார். இந்த நிலையில் அவருடைய வறுமையை கண்டு அவருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவெடுத்த அந்த பகுதி இளைஞர்கள் ஒன்றுகூடி அவருக்காக நிதி திரட்டினர். சுமார் 11 லட்சம் ரூபாய் நிதி கிடைத்தவுடன் அந்த பெண்ணுக்காக ஒரு புதிய வீட்டைக் கட்டி அவரிடம் ஒப்படைத்தனர். 27 வருடம் கழித்து அவர் சொந்த வீட்டில் தனது குழந்தைகளுடன் தற்போது குடியேறியுள்ளார் 
 
நாட்டுக்காக உயிர் நீத்த வீரர்களின் குடும்பங்களையும் காப்பதில் அரசு அக்கறை செலுத்த வேண்டும் என்பதே அனைவரும் எண்ணங்களாக உள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்