அந்த பேட்டியில் அவர், அவசர சட்டமானது குடியரசுத்தலைவரின் ஒப்புதலோடு அமல்படுத்தப்படுவதால் இனி இந்த வழக்கில் சட்டரீதியான பிரச்னை இருக்க வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன். தமிழும், தமிழர்களும் நீண்ட பாரம்பர்யமும் பண்பாடும் உடையவர்கள். பல கலாச்சாரங்களைக் கொண்ட இந்தியாவில் அந்தந்த மாநிலங்களின் கலாச்சாரத்தையும் பாரம்பர்யத்தையும் மதிப்பது அவசியமாகிறது என்றார்.
மேலும், இளைஞா்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். சட்டரீதியாக அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு ஜல்லிக்கட்டு நடைபெறும் பட்சத்தில் அதை நேரில் கண்டுகளிக்க மிகவும் ஆவலாக உள்ளேன் என்றார். ஜல்லிக்கட்டு நடத்தும் அமைப்புகள் ஏதாவது எனக்கு தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுத்தால், அந்த அழைப்பை கண்டிப்பாக ஏற்பேன் எனவும் கூறியுள்ளார்.