டெல்லி விவசாயிகள் போராட்டம் குறித்து வெளிநாட்டு பிரபலங்கள் கருத்து கூறிய கிரிக்கெட் வீரர்களைக் கலாய்க்கும் விதமாக சக கிரிக்கெட் வீரரான மனோஜ் திவாரி “நான் சிறுவனாக இருந்தபோது பொம்மலாட்டத்தை பார்த்ததில்லை. பொம்மலாட்டத்தை காண எனக்கு 35 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது.” என்று பதிவிட்டுள்ளார். கிரிக்கெட் வீரர்கள் சொல்லி வைத்தாற்போல ஒரே மாதிரியாக பதிவிடுவதைதான் அவர் அவ்வாறாக குறிப்பிட்டுள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது எனக் கூறி பரபரப்பைக் கிளப்பினார்.
அதேபோல இப்போது பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து அவர் பெட்ரோல் மற்றும் டீசல் விலை சிறப்பான இன்னிங்ஸை விளையாடியுள்ளது. இக்கட்டான சூழலிலும் பெட்ரோல் சதம் அடித்துள்ளது. அதற்கு இணையாக டீசலும் நன்றாக பார்ட்னர்ஷிப் கொடுத்துள்ளது. சாமான்ய மக்களுக்கு எதிராக விளையாடுவது எளிதானதல்ல. ஆனால் அதை இருவரும் சாதித்துள்ளனர் என அரசை கேலி செய்யும் விதமாக டிவீட் செய்தார்.