கேரள அரசின் பாக்யமித்ரா என்ற லாட்டரி திட்டத்தின் முடிவுகள் சில மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டன. அதில் முதல் பரிசான ஒரு கோடி ரூபாயை திருச்சூர் அருகே உள்ள மாளாபள்ளிப்புரம் பகுதியைச் சேர்ந்த அப்துல் காதர் வென்றார். 64 வயதாகும் அவர் சலூன் கடை ஒன்றை நடத்தி வந்தார். தினமும் 200 ரூபாய் அளவுக்கு லாட்டரிகளை வாங்கிக் குவிக்கும் அளவுக்கு லாட்டரி மோகம் கொண்ட அவருக்கு இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு பரிசு விழுந்த மகிழ்ச்சியில் இருந்தார். ஆனால் அந்த லாட்டரி பணத்தை அனுபவிக்கும் முன்னரே அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்.