தெலங்கானாவில் வசித்து வரும் தொழிலதிபர் ரவிக்கும் அவரது தம்பி ஸ்ரீனிவாசுக்கும் இடையில் சொத்துத் தகராறு இருந்துள்ளது. இந்நிலையில் ரவியின் 9 வயது மகன் ராம்சரணின் பிறந்தநாள் விழாவுக்கு ஸ்ரீனிவாஸ் பிறந்தநாள் கேக்கை பரிசாக அனுப்பியுள்ளார். இந்நிலையில் இந்த கேக்கை சாப்பிட்ட ரவியின் குடும்பத்தினர் 4 பேரும் மயங்கியுள்ளனர்.
அவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க ராம்சரண் முன்பே இறந்துவிட்டதாகவும், ரவி சிகிச்சையின் போது இறந்துள்ளார். மேலும் ரவியின் மனைவி பாக்யா மற்றும் 5 வயது மகள் பூஜிதாவும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.