மும்பை விமான நிலையத்தில் உகாண்டா நாட்டைச் சேர்ந்த பயணி ஒருவர் பதற்றத்துடன் காணப்பட்ட நிலையில், சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவரை பிடித்து விசாரணை செய்தனர். அவர் வைத்திருந்த பொருளில் எந்த போதைப் பொருளும் இல்லை என்ற நிலையில், தனியரைக்கு சென்று விசாரித்த போது போதைப் பொருளை கேப்சூல் வடிவில் விழுங்கி கடத்தி வருவதாக ஒப்புக்கொண்டார்.
இதனை அடுத்து அவரை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், கேப்சூல் வடிவில் போதைப் பொருள் கடத்தியது உறுதி செய்யப்பட்டது. 785 கிராம் கோகைன் என்ற போதைப் பொருளை மருத்துவர்கள் வெளியே எடுத்த நிலையில், அதன் மதிப்பு ₹7 கோடியே ₹85 லட்சம் என்று கூறப்படுகிறது.
இதனை அடுத்து உகாண்டா பயணியை கைது செய்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். எந்த நாட்டிலிருந்து அவர் போதைப் பொருளை கடத்தி வந்தார், மும்பையில் யாருக்கு சப்ளை செய்கிறார் போன்ற விவரங்கள் விசாரணையில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.