ஓடிசா மாநிலம் பாத்ரக் மாவட்டத்தில் வசிப்பவர்கள் பலராம் முகி. இவருக்கு 10 வயதில் ஒரு மகனும், 7 வயதில் ஒரு மகளும் உள்ளனர். அந்நிலையில், கடந்த வருடம் அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில், கையில் பணம் இல்லாமல் கஷ்டப்பட்ட பலராம், அந்த ஆண் குழந்தையை ரூ.25 ஆயிரம் ரூபாய்க்கு ஒருவரிடம் விற்றுள்ளார். அதோடு, அந்த பணத்தில் செல்போன், பெண் குழந்தைக்கு கொலுசு மற்றும் மனைவிக்கு புடவை ஆகியவை வாங்கியுள்ளார்.
இந்த விவகாரம் எப்படியோ வெளியே கசிய, அவரிடம் போலீசார் விசாரணை செய்தனர். அதில், சோம்நாத் சேதி என்பவரிடம் பலராம் தனது குழந்தையை விற்றுள்ளார் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
சோம்நாத்திடம் நடத்திய விசாரணையில், அவரின் 24 வயது மகன் 2012ம் ஆண்டு இறந்து விட்டதால், தனது மனைவியின் வேதனையை போக்க, பலராமிடம் பணம் கொடுத்து அந்த குழந்தையை வாங்கியதாக அவர் கூறினார்.