மூளைக்காய்ச்சலால் 50 குழந்தைகள் பலி: ஒடிசாவில் பயங்கரம்

வெள்ளி, 14 அக்டோபர் 2016 (12:56 IST)
ஒடிசா மாநிலத்தில் மல்காங்கிரி மாவட்டத்தில் கொசுக்களினால் பரவக்கூடிய ஜாப்பனீஸ் என்சிபாலிட்டிஸ் என்னும் வைரஸ் பரவிவருகிறது.

 
இந்த வைரஸால் கிட்டத்தட்ட 52க்கும் மேற்பட்ட குழந்தைகள் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் அங்கு பெறும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
 
இந்த வைரஸால் ஏற்படக்கூடிய மூளைக்காய்ச்சல் அறிகுறி ஏற்படுவதற்கு கிட்டத்தட்ட 5 முதல் 15 நாட்கள் வரை ஆகும். காய்ச்சல், தலைவலி, வாந்தி, உடல் சோர்வு போன்றவற்றின் மூலம் இந்த நோய் தொற்றை தெரிந்துகொள்ளலாம். இந்த நோய்த்தொற்றால் கடந்த 34 நாட்களில் இதுவரை 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
தற்போது இந்த நோய்த் தொற்று தொடர்பாக தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்