புளுவேல் ஆன்லைன் கேமுக்கு தடை வருமா? இன்று டெல்லி ஐகோர்ட்டில் விசாரணை

வியாழன், 17 ஆகஸ்ட் 2017 (06:30 IST)
உலகம் முழுவதும் சிறுவர், சிறுமிகளை அடிமைப்படுத்தியுள்ள புளுவேல் ஆன்லைன் கேமால் இதுவரை சுமார் 3000 பேர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவிலும் இந்த விளையாட்டு காரணமாக பலியான உயிர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.



 
 
சமீபத்தில் கூட கேரளாவில் 16 வயது சிறுவன் தூக்கி தொங்கி மரணம் அடைந்தான். 50 டாஸ்குகள் கொண்ட இந்த ஆன்லைன் கேமில் 50வது டாஸ்க் தற்கொலை செய்து கொள்வது. உயிர் போவது என்றால் என்ன என்பது குறித்த தெரியாத சிறுவர், சிறுமியர் பலர் தற்கொலை செய்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் இந்தியாவில் இந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும் என பல எதிர்ப்பு குரல்கள் வலுத்து வருகின்றன. இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். 
 
இதனையடுத்து இந்த விளையாட்டுக்கு மத்திய அரசு இரண்டு நாள்களுக்கு முன் தடை விதித்தது. இந்த விளையாட்டு தொடர்பான இணைப்புகளை உடனே நீக்குமாறு கூகுள், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட இணையதள சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டது. மேலும் இதுதொடர்பாக பதிவு செய்யப்பட்ட பொதுநல வழக்கு ஒன்றின் விசாரணை டெல்லி ஐகோர்ட்டில் இன்று நடைபெறுகிறது. இந்த ஆன்லைன் கேமுக்கு தடை வருமா? என்பது இன்று தெரியவரும். இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் இந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று பல நாடுகளில் குரல்கள் வலுத்து வருகின்றனர்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்