யூட்யூபை பார்த்து தன் வயிற்றை தானே கிழித்து ஆபரேஷன் செய்த நபர்! - அதிர்ச்சி சம்பவம்!

Prasanth Karthick

வெள்ளி, 21 மார்ச் 2025 (09:53 IST)

உத்தர பிரதேசத்தில் ஒருவர் யூட்யூப் பார்த்து தனக்குத்தானே ஆபரேஷன் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

சமீப காலமாக யூட்யூப் மூலமாக பல விஷயங்களை கற்றுக் கொள்ளும் பழக்கம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. தையல் பயிற்சி, சோப் தயாரித்தல், சமையல் என பலவற்றை யூட்யூபில் கற்றுக் கொள்ளும் அதேசமயம் ஆபத்தான சில விஷயங்களை யூட்யூபை பார்த்து சிலர் செய்வது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. 

 

முக்கியமாக மருத்துவம் சார்ந்த விஷயங்களில் யூட்யூப் பார்த்து பிரசவம் பார்ப்பது போன்ற ஆபத்தான செயல்கள். அப்படியாக யூட்யூபை பார்த்து வயிற்றைக் கிழித்துக் கொண்டுள்ளார் ராஜேஷ் பாபு என்ற நபர். 

 

உத்தர பிரதேசம் மதுராவை சேர்ந்த இவர் கடந்த சில காலமாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். மருத்துவமனை சென்றும் குணமாகவில்லை. அதற்கு யூட்யூபில் சில வீடியோக்களை பார்த்த அவர் அதில் உள்ளதை நம்பி தனது வயிற்றை கத்தியால் கிழித்துள்ளார். ஆனால் அதற்கு பிறகு என்ன செய்வது என தெரியாமல் தனக்கு தானே 11 தையலையும் போட்டுக் கொண்டுள்ளார். ஆனால் வலி அதிகரிக்கவே பயந்து போய் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது.  மருத்துவம் சார்ந்த விஷயங்களில் இதுபோன்ற யூட்யூப் வீடியோக்களை பின்பற்றாமல் மருத்துவ நிபுணரை அணுகுவது அவசியம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்