மோடி தன்னை டீக்கடை வியாபாரி என்று கூறிவருவது பச்சை பொய் என்றும், நாட்டிற்கு பொய் சொல்லும் காவலாளி தேவையில்லை என்றும் கூறிய மம்தா, நம் நாட்டிற்கு மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திரபோஸ் போன்ற தலைவர்கள் தான் தேவையென்றும், காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேவின் ஆதரவாளர் தேவையில்லை என்றும், அவர்களை நாட்டை விட்டே வெளியேற்ற வேண்டும் என்பதுதான் எங்களது இலக்கு என்றும் மம்தா மேலும் பேசினார்
மோடியின் ஆட்சியில் சிறுபான்மையினர் மற்றும் ஆதிவாசிகள் தாக்கபப்டுவதாகவும், பெட்ரோல் டீசல் விலை உயர்ந்ததால் நடுத்தர மக்கள் கடும் அவதிக்குள்ளாகியிருப்பதாகவும், ஜனநாயகத்திற்கே ஆபத்தை உண்டாக்கும் இந்த ஆட்சியை தூக்கி எரிய வேண்டும் என்றும் மம்தா ஆவேசமாக பேசியுள்ளார்.