மம்தா பானர்ஜி தொகுதியில் இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது!

வியாழன், 30 செப்டம்பர் 2021 (08:29 IST)
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற மேற்கு வங்க மாநில சட்டமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மிக அபாரமாக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதனை அடுத்து மம்தா பானர்ஜி மீண்டும் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். மேற்குவங்க மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெற்ற போதிலும் மம்தா பானர்ஜி தான் போட்டியிட்ட நந்திகிராம் என்ற தொகுதியில் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
இதனையடுத்து அவர் ஆறு மாதங்களுக்குள் எம்எல்ஏ ஆக வேண்டும் என்ற நிலையில் தற்போது பவானிபூர் என்ற தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் இந்த தொகுதியில் வேட்பாளராக மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார். 
 
இந்த தொகுதியில் இடைத்தேர்தல் இன்று நடை பெறுவதை அடுத்து சற்று முன்னர் வாக்குப்பதிவு தொடங்கியது என்பதும் வாக்காளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர் என்பதும் வாக்குப்பதிவு நடைபெறும் அனைத்து பகுதிகளிலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்