மேற்கு வங்க மாநிலம் பவானிபூர் சட்டமன்றத் தொகுதிக்கு செப்டம்பர் 30 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும்நாளை 10-ம் தேதி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் அபார வெற்றி பெற்று மேற்கு வங்கத்தில் ஆட்சியைப் பிடித்தது.
ஆனால், மம்தா பானர்ஜி தாம் போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் தோற்றுப் போனார். தற்போது சட்டமன்ற உறுப்பினராக இல்லாத மம்தா பானர்ஜி தமது முதல்வர் பதவியில் தொடர வேண்டுமானால் ஏதாவது ஒரு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெல்லவேண்டும்.
எனவே, தற்போது பவானிபூர், சாம்சர்கஞ்ச், ஜாங்கிபூர் ஆகிய தொகுதிகளில் நடக்கும் இடைத்தேர்தலில் பவானிபூர் சட்டமன்றத் தொகுதி மம்தா போட்டியிடுகிறார். இதற்காக நாளை 10 ஆம் தேதி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.