பாரசிட்டமல் உள்ளிட்ட முக்கிய மருந்துகள் தரநிலை சோதனையில் தோல்வி! - அதிர்ச்சி தகவல்!

Prasanth Karthick

வியாழன், 26 செப்டம்பர் 2024 (09:24 IST)

அன்றாடம் உடல் பாதிப்புகளுக்கு மக்கள் பயன்படுத்தும் அவசியமான மருந்துகளில் பல மருந்துகள் தரநிலை சோதனையில் தோல்வி அடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

இந்தியாவில் பல்வேறு உடல் உபாதைகளுக்கும் மக்கள் மருந்துகள் எடுத்துக் கொள்வது அதிகமாக உள்ளது. முக்கியமாக காய்ச்சல், சளி போன்ற சமயங்களில் மக்கள் பலர் மருத்துவர் பரிந்துரை இல்லாமலே மருந்தகங்களில் பாரசிட்டாமல் உள்ளிட்ட மாத்திரைகளை வாங்கி போட்டுக் கொள்வதும் நடக்கிறது.

 

இந்நிலையில் சமீபத்தில் மருந்து கட்டுப்பாட்டக தர சோதனையில் பல மருந்துகள் தரமற்று தோல்வி அடைந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தோல்வியடைந்த மருந்துகளில் மக்கள் தினசரி எடுக்கும் விட்டமின் மருந்துகள், பாரசிட்டாமல், டெல்மிசார்டன், ஆண்டி ஆசிட் மருந்துகள் என பல மருந்துகளும் உள்ளன. 

 

மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பல மருந்துகள் தரமற்றவையாக இருப்பதாக தெரிய வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்