மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜகவை எதிர்த்து புதிய கூட்டணி அமைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த கூட்டணியில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா பிரிவு ஆகிய மூன்று கட்சிகள் தொகுதி உடன்பாடு செய்துள்ளன.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் 48 மக்களவைத் தொகுதிகள் இருக்கும் நிலையில் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா பிரிவுக்கு 20 தொகுதிகள், காங்கிரஸ் கட்சிக்கு 18 தொகுதிகள், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன