குஜராத் மாநிலத்தில், மக்கள் வசிக்கும் பகுதிகளில், இரவு வேளையில், சிங்கங்கள் நடமாடும் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது.
இந்த நிலையில், அப்பூங்காவின் பாதுகாப்புப் பகுதியை விட்டு வெளியேறிய 7 சிங்கங்கள், மக்கள் வசிக்கும் பகுதிகளில் புகுந்து, அங்குள்ள தலேட்டி என்ற சாலையில் கம்பீரமாக நடந்து சென்றன.
ஏற்கனவே, வனவிலங்கியல் பூங்காவில் இருந்து மக்கள் வசிக்கும் பகுதிக்கு விலங்குகள் வருவதாக ஊர் மக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கூறியுள்ளதாகத் தெரிவித்தனர். மேலும், இரவில் நடமாடும் விலங்குகளால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.