ஐபிஎஸ் அதிகாரி ரூபா மீது ரூ.20 கோடி அவமதிப்பு வழக்கு

செவ்வாய், 28 நவம்பர் 2017 (16:08 IST)
பெங்களூர் பார்ப்பன அக்ராஹர சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா, ரூ.2 கோடி வரை லஞ்சம் கொடுத்து சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் என்பதை ஆதாரத்துடன் கண்டுபிடித்து வெளியுலகிற்கு அறிவித்தவர் துணிச்சலான பெண் ஐபிஎஸ் அதிகாரி ரூபா
 
சிறைத்துறை டிஐஜி ஆக இருந்த ரூபா, சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயணா ராவ் அவர்களும் இதற்கு உடந்தை என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்தார்.
 
இந்த நிலையில் தன்மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டி கூறி தனது புகழுக்கு களங்கம் விளைவித்ததாக ரூபா மீது சத்தியநாராயணா ராவ், ரூ.20 கோடி நஷ்ட ஈடு கேட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார்.
 
இந்த வழக்கு இன்று பெங்களூரு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதுகுறித்து டிசம்பர் 16ஆம் தேதிக்குள் ரூபா பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். 
 
இந்த நிலையில் ரூ.20 கோடி நஷ்ட ஈடு கேட்டு என் மீது அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருப்பது அடிப்படை ஆதாரமற்றது என்று ரூபா தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்