தலை, கால்கள் துண்டிக்கப்பட்ட சிறுத்தை! – பற்களுக்காக வேட்டை!

வெள்ளி, 13 டிசம்பர் 2019 (18:21 IST)
மகாராஷ்டிராவின் காட்டுப்பகுதியில் சிறுத்தை சடலம் ஒன்று தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காட்டு விலங்குகள் சில வெகுமதிகளுக்காக சட்டத்திற்கு புறம்பான வகையில் வேட்டையாடப்படுவது தொடர்ந்து வருகிறது. யானைகள் அவைகளின் தந்தங்களுக்காக வேட்டையாடப்படுவது போலவே புலி, சிறுத்தை, மான் போன்ற விலங்குகளும் நகங்கள், பற்கள், கொம்புகள் ஆகியவற்றுக்காக வேட்டையாடப்படுகின்றன.

இந்த பொருட்களின் சந்தை மதிப்பு மிக அதிகம் என்பதாலும் பலர் இதுபோன்ற பொருட்களை வாங்க ஆர்வம் காட்டுவதாலும் தொடர்ந்து இதுபோன்ற குற்ற செயல்கள் நடைபெற்று வருகின்றன.

சமீபத்தில் மகாராஷ்டிராவில் சாலையோரத்தில் தலை மற்றும் கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் சிறுத்தை ஒன்றின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அதன் பற்கள் மற்றும் கூறிய நகங்களுக்காக அது வேட்டையாடப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

இதுகுறித்து தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் விலங்குகள் சார்ந்த பொருட்களை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டாமல் இருந்தாலே இதுபோன்ற வேட்டைகளை குறைக்க முடியும் என கூறியுள்ளார்.

This #Leopard was found on a road at Maharashtra. His Head & paws were cut off. Now his nails, teeths etc will be sold in market. Wildlife crime is a demand based business. Say no to all kind of animal products. Like this thousands are killed annually for their body parts. Tragic pic.twitter.com/gmjfgYmgtg

— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) December 13, 2019

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்