'விவேகம்' படத்தின் பிரமாண்ட ரிலீஸ் திட்டம்: கோலிவுட் ஆச்சரியம்

ஞாயிறு, 18 ஜூன் 2017 (22:00 IST)
தல அஜித் நடித்த விவேகம்' திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி ரிலீஸ் ஆவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில் இந்த படத்தை ஒரே நாளில் தமிழ்நாடு, கேரளா, தெலுங்கு மாநிலங்கள், கர்நாடகம் மற்றும் வட இந்தியாவில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு வருகிறது.



 


கேரளா மற்றும் கர்நாடகாவில் நேரடியாக தமிழில் வெளியாகவுள்ள இந்த படத்தின் தெலுங்கு மற்றும் இந்தி டப்பிங் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

'வேதாளம்' வெற்றி படத்திற்கு பின்னர் அஜித்தின் மார்க்கெட் தென்னிந்தியா மட்டுமின்றி வட இந்தியாவிலும் பரவியுள்ளதால் இந்த படம் மூன்று மொழிகளில் உலகம் முழுவதும் சுமார் 2000 திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனை கேள்விப்பட்டு கோலிவுட் திரையுலகம் ஆச்சரியத்தின் உச்சத்தில் உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்