இது தொடர்பாக சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள லாலு பிரசாத் யாதவ், அன்பு, மகிழ்ச்சி கலந்த வண்ணமயமான பண்டிகை ஹோலி என்று குறிப்பிட்டுள்ளார். இந்த நல்ல நாளில் அனைத்து சூழலிலும் அன்பு மற்றும் சகோதரத்துவம் மேலோங்கி நிற்க உறுதியேற்போம் என்றும் இந்த வண்ணமயமான விழா அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியையும் வளத்தையும் பெருக்குவதாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.